ஹமாஸ் இயக்கத்துடன் யுத்தம் செய்யும் போர்வையில் அப்பாவி மக்களை கொன்றுகுவிக்கும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக உலக முஸ்லிம்களின் முக்கியமான இரண்டு புனித ஸ்தலங்களுக்கும் தலைமை பதவி வகிக்கும் சவூதி மன்னர் தமது கண்டனத்தை முதன் முதலாக வெளியிட்டுள்ளார்.
இன்று சவூதி அரேபிய தேசிய தொலைகாட்சியில் சவூதி மன்னரின் கண்டன அறிக்கை வாசிக்கப்பட்டது.பலஸ்தீனத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் தொடர்பாக சர்வதேசம் பாராமுகமாக இருப்பது தொடர்பில் தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
சுமார் நான்கு வாரங்களாக தொடரும் காஸா யுத்தத்தில் சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் . இதில் ஐநூறு குழந்தைகள் உட்பட ஏராளமான வயோதிபர்கள் மற்றும் பெண்களும் அடங்குவர்.