BREAKING NEWS

Aug 1, 2014

காத்தான்குடி கிண்ணியா சாய்ந்தமருது : இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வெள்ளிகிழமை ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர் இஸ்ரேலிய சியோனிச அரசை கண்டித்து காத்தான்குடியும்  , கிண்ணியாவிலும் சாய்ந்தமருதிலும்   ஆர்பாட்ட பேரணிகள் இடம்பெற்றுள்ளன . பலஸ்தீன் காஸா
நகரில் சியோனிச இஸ்ரேலினால் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி அங்கு இடம் பெறும் மிலேச்சத்தனமான தாக்குதலை வண்மையாக கண்டித்தும் 01-08-2014 இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் பாரிய கண்டனப் பேரணி  மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்திலும் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவிலும் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்திலும் இடம்பெற்றது
காத்தான்குடியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டிலும் , கிண்ணியாவில் ஜம்இயத்துல் உலமாவின் கிளையின் ஏற்பாட்டிலும் இடம்பெற்றது. இலங்கை அமெரிக்க தூதரகம் ஸ்லிம் நாடுகளுக்கான தூதுவராயலயங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்புவதற்கான மஹஜர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாக வைத்து கையளிக்கப்பட்டது.
அதேபோல் சாய்ந்தமருது ஊர்வலத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள்சபை,இலங்கை அரசாங்கம் மற்றும் முஸ்லிம் நாடுகளின் துதரககங்கள் முஸ்லிம் அமைப்புகளுக்கு அனுப்புவதற்காக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எ.எல்.எம்.சலீம் அவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
காத்தான்குடி
156
கிண்ணியா
1310
சாய்ந்தமருது
13

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &