ISIS கிளர்ச்சி குழு, தாம் உலகில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவரப்போவதாக வளைகுடா ஆப்ரிக்கா ஆசியா இலங்கை இந்தியா உற்பட வரைபடம் ஒன்றினை வெளியிட்டிருந்தனர்.
இவ்வரைப்படம் உலகின் அனேகமான முன்னனி சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டிந்த நிலையில் நேற்று இடம்பெற்ற ஊடவியளார் சந்திப்பில் கருந்து வெளியிட்ட ஜாதிக ஹெல உறுமையின் பிரசார செயளாலர் நிஷாந்த சிறீ விக்ரமசிங்க கருத்துவெளியிட்டுள்ளார்.
ஐ எஸ் ஐ எஸ் வெளியீட்டுள்ள வரைபடம் தொடர்பாக அரசாங்கம் அவதானமாக செயற்படவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கிலாந்து பிரமர் டேவிட் கெமரூன் இங்கிலாந்து பாரளுமன்றத்தில் ஐ எஸ் ஐ எஸ் மற்றும் தலிபான்கள் ஐரோப்பாவுக்குள் கால் பதித்துள்ளதாக கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அதேவளை இலங்கையும் இதற்கு விதிவிலக்கு அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சில முஸ்லீம் கடும்போக்கு வாதிகள் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்கள் உயர்மட்ட தலையீடுகள் காரணமாக ஊடகங்களில் வெளிவரவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.