BREAKING NEWS

Aug 1, 2014

கடத்தப்பட்ட மீகலெவ சிறுவன் மீட்பு

கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவன் மீட்பு
கடத்திச் செல்லப்பட்ட மீகலெவ - குணுபொலகம பிரதேச வியாபாரியின் நான்கு வயது மகன் இன்று (01) மீட்கப்பட்டுள்ளார். 

டனிது யசீன் என்ற சிறுவனே குற்ற புலனாய்வு பிரிவினரால் கல்கமுவ பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

கடந்த 28ஆம் திகதி இரவு சிறுவன் கடத்திச் செல்லப்பட்டார். 

மோட்டார் சைக்கிளில் குறித்த வியாபாரியின் வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத நால்வர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

மேலும் இதன்போது சந்தேகநபர்களால் வியாபாரி மற்றும் அவரது ஆறு வயது மகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &