BREAKING NEWS

Aug 25, 2014

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ராணுவத்தில் இணைந்த முஸ்லிம் பெண்….



-எம்.ஜே.எம். தாஜுதீன்-


இலங்கை இராணுவத்தில் முதற் தடவையாக முஸ்லிம் யுவதியொருவர் இணைந்துள்ளார்.அம்பாறையைச் சேரந்த மு.றிசானா என்ற முஸ்லிம் யுவதியே இராணுவத்தில் இணைந்து பயிற்சி நிறைவுசெய்துள்ளார். இந்த முஸ்லிம் யுவதியும் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த 35 தமிழ் யுவதிகளும் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்து நேற்று வெளியேறினர்.

இப்பயிற்சி நெறியின் நிறைவு விழா, திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில் நடைபெற்றது. இப்பயிற்சிநெறியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மண்டூரைச் சேர்ந்த தெய்வேந்திரன் ரஞ்சிதா என்ற யுவதி கௌரவிக்கப்பட்டார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &