பல நூற்றாண்டு வரலாறு கொண்ட காஸாவின் ஜபலியா நகரில் இருக்கும் அல் ஒமரி மஸ்ஜித் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலினால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது (Video)
அல் ஒமரி மஸ்ஜித் குறித்த இடத்தில் கி.பி. 647 ஆம் ஆண்டு முதல் நிலைகொண்டிருப்பதாக குறிப்பிட்டப்படுகிறது . இஸ்ரேல் சியோனிச வான் தாக்குதலில் இந்த மஸ்ஜித் தகர்க்கப்பட்டுள்ளது . இந்த மஸ்ஜித்தின் முகப்பு வாயில் மற்றும் மினாரத்; மம்லூக் காலத்தைச் சேர்ந்தது. அல்லது குறைந்தது 500 ஆண் டுகள் பழைமையான தாகும்.
ஜபலியாவின் மத்திய பகுதியில் உள்ள இந்த மஸ்ஜித்தை பிரதேச மக்கள் ‘பெரிய பள்ளிவாசல்’ என்று அழைத்துவந்தனர். கடந்த சனிக்கிழமை காசாவில் ஐந்து பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தி யதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் குறிப்பிட்டுள்ளது. அங்கு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் ஹமாஸ் கட்டளைத்தளம் மற்றும் பயிற்சி முகாம் இருந்ததாகவும் இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மற்றுமொரு மஸ்ஜித் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் முஅத்தின் தொழுகைக்கு அழைப்பவர் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த 28 தினங்களாக இஸ்ரேல் காஸா மீது நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை 10 மஸ்ஜிதுக்கள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. தவிர 80 மஸ்ஜிதுக்கள் மற்றும் இரு கிறிஸ்தவ தேவாலயங்கள் பாதியளவில் தகர்க்கப்பட்டுள்ளன.