BREAKING NEWS

Aug 4, 2014

ISIS ஏன் காசா மக்களுக்காக போராட முடியாது? - Junaith M Haris


By: Junaith M Haris
நம்மில் பலர் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்தை ஆதரித்து கருத்து வெளியிடுகி;ன்றார்கள். உண்மையில் அவர்கள் ஜிஹாத் போராளிகள்தானா என்பதில் என்னை சந்தேகம் கொள்ள வைத்துள்ளது. முஸ்லிம்களின் வாழ்வியலில், அவர்களின் இருப்பில், அவர்களுக்கு உண்மையான அக்கரை இருக்கின்றது என்று எனக்குத் தோன்றவில்லை.


ஈராக், சிரியா ஆகிய இடங்களில் ஆதிக்கம் செலுத்தி அந்த அரசாங்கங்களையே நிலைகுலையச் செய்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஏன் காசா மக்களுக்காக போராட முடியாது? இவர்கள் ஏன் இன்னமும் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் மீது அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படவில்லை. குறைந்தது இஸ்ரேலுக்கு எதிராக அவர்கள் ஏன் கிளர்ந்தெழவில்லை. முஸ்லிம் நாடுகளை மாத்திரம் ஏன் அவர்கள் இலக்கு வைக்கிறார்கள்.


இவர்களின் குறிக்கோள் கிலாபத் ஆட்சியை நிறுவுதா அல்லது இருக்கும் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைப்பதா என்பது எனக்கு புரியவில்லை. ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் மட்டுமல்ல எகிப்திலும்தான் அராஜகம் நடக்கிறது. ஏன் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களர்களுக்கு இது தெரியவில்லை.


பஷர் அல் அசாதுக்கு எதிரான வெளிநாடுகளின் கூட்டு முயற்சி தோல்வி கண்டமை நம் அனைவருக்கும் தெரியும். இப்போது அந்த நாட்டை சீர்குலைக்க இப்படியொரு கிளர்ச்சிப்படை. இவர்களுக்கு ஒருபுறமிருந்து ஆயுத உதவி வேறு. மறுபுறத்தில் குர்திஷ் இனத்தவர்களின் எழுச்சி. தனிநாடு கோருகின்றார்கள். அதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் கோரஸ் எழுப்புகின்றன. ஈராக் அரசாங்கத்திற்கு எதிராகவே போராட முடிந்த ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஏன் இஸ்ரேலின் ஏஜன்டாக செயற்படும் குர்திஷ் பிராந்தியத்தை கட்டுப்படுத்த முடியாது.


முஸ்லிம் உலகம் இன்னமும் விழித்துக் கொள்ளவில்லை என்றுதான் இவரக்ள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &