நீண்ட காலமாக சிரிய அரசுக்கெதிராக யுத்தம் செய்து, பின்பு இராக்கின் பல பிரதேசங்களை கைப்பற்றி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் ISIS படையினர் காசாவையும் வந்தடைந்துள்ளனர். ISIS படையினரால் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஒளித்தொகுப்பில் இச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ISIS படையினர் காசாவின் மரங்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேலுக்கு ஏவுகணை தாக்குதல் நடத்துவது காட்டப்பட்டுள்ளது. ISIS இன் இந்த திடீர் தாக்குதல் இஸ்ரேலை மேலும் கதிகலங்க வைத்துள்ளது.