BREAKING NEWS

Jul 15, 2014

ஹமாசின் ஏவுகணை வீச்சு எல்லைக்குள் முழு இஸ்ரேலும் வந்து விட்டது

Mideast Israel Palestinians

தலைநகர் டெல்-அவிவ் உட்பட, இஸ்ரேலிய நகரங்கள் பலவற்றில் ஹமாஸ் இயக்கம் ஏவும் ஏவுகணைகள் வந்து விழுந்து கொண்டுள்ள நிலையில், நேற்று மாலை முதல் தடவையாக இஸ்ரேலின் நஹாரியா என்ற சிறு நகரத்தின் மீதும் வந்து விழுந்தன இரு ஏவுகணைகள்.

தலைநகரிலேயே ஏவுகணைகள் மழை போல பொழிந்து கொண்டிருக்கும்போது, இந்த சிறிய நகரத்தின்மீது இரு ஏவுகணைகள் வந்து விழுந்ததில் என்ன விசேஷம்?

விஷயம் இருக்கிறது. நஹாரியா என்ற இந்த சிறிய ரிசாட் நகரம்தான், இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள இறுதி நகரம்! இந்த நகரத்தில் இருந்து 15 நிமிட டிரைவிங்கில், லெபனான் எல்லையை சென்றடையலாம்!

காசா எல்லையில் இருந்து ஹமாஸ் இயக்கத்தால் ஏவப்பட்ட இரு ஏவுகணைகள் 172 கி.மீ. தொலைவுக்கு பறந்து வந்து இந்த நகரத்தில் வீழ்ந்ததை அடுத்து, இஸ்ரேலின் அனைத்து நகரங்களும், ஹமாஸ் இயக்கத்தின் ஏவுகணை வீச்சு எல்லைக்குள் (பயரிங் ரேஞ்ச்) வந்துவிட்டன.

இதனால், இன்றுமுதல் இஸ்ரேலின் எந்தவொரு நகரமும் விதிவிலக்கு இல்லாமல், அனைத்து நகரங்களும் ஹமாஸின் ஏவுகணை தாக்குதலுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &