ரமழான் பிறை 17 இல் உலகளாவிய முஸ்லிம் உம்மாவினால் நினைவு கூறும் நாள் பதர்நாள் .
பத்ர் போர் இஸ்லாமிய வரலாற்றில் முதல் போராகும் போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சிறுபான்மையான சுமார் 313 முஸ்லிம்கள் கனரக ஆயுதங்கள் தரித்த 1000 பேர் கொண்ட பெரும்பான்மை எதிரிகளை களத்தில் சந்தித்து எதிரிகளை வீழ்த்திய நாள் .
அந்த சிறுபாண்மையினருக்கு ஈமான் கொடுத்த வீரத்தாலும் , தியாகத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று எதிரிகளை சிதறடித்த நாள் . இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் -ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடைபெற்றுள்ளது.
அன்று அந்த சிறுபான்மை முஸ்லிம்கள் அடங்கி ஒடுங்கி இருந்தால் இன்று இஸ்லாத்தின் எழுச்சியை உலகம் கண்டிருக்காது என வரலாற்றாளர்கள் குறிப்பிடுவது சுட்டிக்காட்டத்தக்கது .