369 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய தென்ஆபிரிக்கா அணி 111 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குயின்டன் டி கொக் 37 ஓட்டங்களையும், வேர்ணன் பிலான்டர் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 5 விக்கெட்களையும், டில்ருவான் பெரேரா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களைப் பெற்று தமது துடுபாட்டத்தை இடை நிறுத்தியது. இதில் குமார் சங்ககார 72 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 63 ஓட்டங்களையும், உப்புல் தரங்க 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மோர்னி மோர்க்கல் 4 விக்கெட்களையும், டேல் ஸ்டைன் 2 விக்கெட்களையும், இம்ரான் தாகிர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக இலங்கை அணி இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில் 121.4 ஓவர்களை எதிர்கொண்டு சகல விக்கெட்களையும் இழந்து 421 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மஹேல ஜெயவர்தன 165 ஓட்டங்களையும், தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய நிரோஷன் டிக்வெல்ல 72 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 63 ஓட்டங்களையும் கௌஷால் சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றனர். . தென் ஆபிரிக்கா அணியின் பந்துவீச்சில் டேல் ஸ்டைன், JP டுமினி, வேர்ணன் பிலான்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 134.5 ஓவர்களில் 282 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஹாசிம் அம்லா ஆட்டமிழக்காமல் 139 ஓட்டங்களையும், பப் டு பிலேசிஸ் 36 ஓட்டங்களையும், பெற்றனர். சுரங்க லக்மால், 5 விக்கெட்களையும், ரங்கன ஹேரத் 4 விக்கெட்களையும் பந்துவீச்சில் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக மஹேல ஜெயவர்தன தெரிவு செய்யப்பட்ட அதேவேளை தொடர் நாயகனாக டில்ருவான் பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.