மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினறுமான அனுர குமார திஸாநாயக்க இரத்தினபுரி விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சற்று முன் எமது சகோதர ஊடகமொன்றினால் கண்டி மாவட்ட மக்கள் விடுதலை முன்னணி அமைப்பாளரை தொடர்ப்புகொண்டு கேட்டபோது அனுர குமார திஸாநாயக்க அவர்கள் தனது கெப் ரக வாகனத்தில் சிறு விபத்துக்கு உள்ளானதாகவும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.
அனுர குமார திஸாநாயக்க அவர்களை அவரின் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் பதில் அளிக்கவில்லை..

