BREAKING NEWS

Jul 23, 2014

இஸ்ரேல் சென்றுவந்த அமைச்சர் சம்பிக்க

கொழும்பில் நான்கு   இஸ்ரேவேலிய நிலையங்கள் இயங்குகின்றன. 25000 க்கும் மேற்பட்ட சிங்கள ஆண்கள் அங்கு தொழில்புரிகின்றனர். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட சிங்கள பெண்கள் இந் நிலையங்கள் ஊடாக விசா பெற்று இஸ்ரேலில்  பணிப்பெண்களாக தொழில் பெற்றுச்சென்றுள்ளனர்.
வருடா வருடம் ஊடகவியலாளர்கள் , பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என பல பிரிவினர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப் பட்டு இஸ்ரேவேலுக்குச் செல்கின்றனர். வெளிநாட்டு அமைச்சும்,  பாதுகாப்பு அமைச்சும் இஸ்ரேவேலுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டுள்ளது. அண்மையில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இஸ்ரேவேல் நாட்டுக்குச் சென்று வந்தார்.
நான் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேவேல் நாட்டுக்கு எதிராக பேசியதற்காக பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். இஸ்ரேல் பற்றி பேச நீ யார் ? எனக் கேட்டிருந்தார். ஜனாதிபதி இஸ்ரேல்  நாட்டுடன் கொண்டுள்ள தொடர்பை நிறுத்திக் கொள்ள வேண்டும். காஸாவில் பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்ற இஸ்ரேலுடன் இலங்கை அண்மைக்காலமாக ஏற்படுத்திய இராஜதந்திர தொடர்புகளை நிறுத்த வேண்டும். என இலங்கை பலஸ்தீன் நட்புரவு அமைப்பு ஊடாக இலங்கை  அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக இங்கு பிரதான உரையாற்றிய முன்னாள் ஜ.நா. தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யுத்த காலத்தில் இலங்கை அரசு இஸ்ரேலுடன் பாதுகாப்பு தொடர்பான  விடயத்தில் பாரிய தொடர்புகளை வைத்திருந்தது
மறுபுறம் இஸ்ரேவேல் பிரிவினை வாதிகளுக்கும் உதவினார்கள். அண்மையில் நடைபெற்று வரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களில் இஸ்ரேவேல் ஆதரவுபெற்ற அமைப்பு பின்னால் உள்ளதாகவும் கலாநிதி தயான் ஜயதிலக்க கூறினார்.
இலங்கை பலஸ்தீன் அமைப்பின் தலைவர்கள் சிரேஸ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்தின முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், பலஸ்தீன தூதுவர் சுகையிர் அப்துல்லா முன்னாள் ஜ.நா இலங்கைக்கான தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்கஆகியோறும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இந் நிகழ்வு நேற்று கொழும்பு நூலக காப்பண கூட்ட மண்டபத்தில் ;முனனாள் அமைச்சர் இமதியாஸ் பாக்கீர் மாக்கார் தலைமையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் நேற்று முன்தினம் தொலைபேசி முலம் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் பலஸ்தீனத்தில் ஏற்பட்டு வரும் மனித படுகொலைகளுக்கு நாம் என்ன செய்ய முடியும் அத்துடன் கொழும்பில் கண்டன  கூட்டமொன்றை நடத்துமாறு பேசினார். ஆகவே குறுகிய நாற்களுக்குள் இக் கண்டனக் கூட்டத்திணை ஏற்பர்டு செய்தாகவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
பலஸ்தீனத் தூதுவர் – இலங்கை உட்பட வெளிநாட்டு நாடுகள் சேர்ந்து இஸ்ரேவேல் செய்யும் அட்டுளியங்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் எனக் கூறினார்.
65
423

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &