காணாமல் போனவர்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க ஜனாதிபதி சர்வதேச நிபுணர்களை நியமித்துள்ளார். இதனை இனவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமைய எதிர்த்துள்ளது
பிரித்தானிய சட்ட வல்லுனரான சேர் டெஸ்மன்ட் டி சில்வா தலைமையிலான மூவர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். என தெரிவிக்கப்படும் நிலையில் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட விசாரணைக் குழுவிற்கு மாற்றீடாக ஜனாதிபதி இந்த நிபுணர் குழுவினை நியமித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது சொந்தக் கொள்கையை மீறும் வகையிலானது என ஜாதிக ஹெல உறுமைய தெரிவித்துள்ளது நிபுணர் குழுவினை நியமிப்பது குறித்து தமது கட்சியிடம் அறிவிக்கவோ அல்லது கருத்துக்களை கோரவோ இல்லை என கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்னசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிபுணர் குழுவின் நியமனத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும்இ இது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் உள்விவகாரங்களில் எந்தவகையிலான சர்வதேச தலையீட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.