மக்கொல அனாதை இல்லத்தின் கிளை இல்லம் மல்வானை பிரதேசத்தில் அமைந்துள்ளது. குறித்த அனாதை இல்லத்தில் மிருக தினமான இன்று மாடறுத்ததாக கூறி இன்று மாலை பிரதேச பிக்குமார் உற்பட சில பிரதேசவாசிகள் குறித்த அனாதை இல்லத்தை முற்றுகை இட்டதில் அங்கு பதட்டமான சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து ஸ்தலத்துக்கு வந்த போலீசார் அங்கு புதைக்கப்பட்டி திருந்ததாக கூறப்படும் மாட்டுத்தோலை போலிசார் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்.மேலும் ஸ்தலத்தில் பெரும்திரளான போலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது நிலைமை சுமுகமாக இருப்பதாகவும் குறித்த அநாதை இல்லத்தில் இருந்த எழுபது வரையான ஆடுகளை இரண்டு லொறிகளில் போலிசார் ஏற்றிக்கொண்டு இருப்பதாகவும் அங்கிருக்கும் மடவளை நியூஸ் நிருபர் தெரிவித்தார்.
அதேநேரம் பொலிசாரால் கைப்பற்றப்பட்ட மாட்டுதோல் உணவுக்காக நேற்று அறுக்கப்பட்டது என குறித்த அநாதை இல்ல நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
சற்றுமுன் எமக்கு கிடைத்த தகவலின் படி குறித்த சம்பவம் தொடர்பாக போலிசார் ஒருவரை கைது செய்து மல்வானை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளானர்.
உலக மிருக தினமான இன்று மிருகங்களை அறுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.