அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவும்கொழும்பு பெரிய பள்ளிவாசலும் இணைந்து பல வருடங்களாக ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தின் இருபத்தொன்பதாவது தினத்தில் பிறையைப் பார்க்கும்படி நாட்டு மக்களுக்கு ஏவி அடுத்த மாதத்தை முடிவு செய்கின்றது.
ஏனைய நாடுகளைப் போன்றுஇலங்கையில் பிறைபார்ப்பதற்கென்று சில முக்கிய தீர்மானங்கள் உள்ளன. அவற்றில் இலங்கையில் பிறை தென்பட வேண்டும். அப்பிறையை எவ்வித் கருவியின் உதவியுமின்றி வெற்றுக் கண்களால் பார்க்க வேண்டும் என்ற தீரமானங்கள் மிக முக்கியமானவை. குர்ஆன் ஹதீஸுக்கு அமைய நாட்டின் மிக முக்கிய ஆலிம்களும், துறை சார்ந்தவர்களும் இணைந்து எடுத்த இத்தீர்மானங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரகடனப்படுத்தியது.
இத்தீர்மானங்களுக்கு அமையவே ஒவ்வொரு மாதமும் பிறை பார்க்கப்பட்;டு அடுத்த மாதம் அறிவிக்கப்படுகின்றது. உலகின் சில நாடுகள் வெறுமனே ரமழான்ஷவ்வால்; துல்-ஹிஜ்ஜஹ் மாதத்திற்கும் மாத்திரமே பிறை பார்க்கின்றது. மற்ற மாதங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட கணக்கின் அடிப்படையில் ஆரம்பிக்கப்படுகின்றது.
பெறும்பாலும் இலங்கைக்கும் சஊதிக்கும் ஒரு நாள் வித்தியாசப்படுவதுண்டு. என்றாலும் இம்முறை இரண்டு நாட்கள் வித்தியாசப்படுவதை நாம் அறிவோம். இதற்கான காரணம் இம்முறை துல் ஹிஜ்ஜஹ் மாதத்திற்காக பிறை பார்க்க வேண்டிய தினமாகிய 2014.09.25அன்று பிறை கான்பதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தும்,நாட்டின் முஸ்லிம்களைப் பிறை பார்த்து அறிவிக்கும்;படி அறிவித்திருந்தும் நாட்டின் எந்தப் பகுதியிலும் பிறை தென்;பட்டதற்கான ஒரு தகவலும் எமக்குக் கிடைக்கவில்லை.
இக்கட்டத்தில் துல்-கஃதா மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே நபி வழியாகும். என்றாலும் சஊதி 2014.09.24 அன்று மாலை பிறை பார்த்து 2014.09.25 துல்-ஹிஜ்ஜஹ்வின் முதல் நாள் என்று அறிவித்தது. இலங்கையில்2014.09.25 பிறை தெண்படவில்லையென்பதனால் துல்-கஃதாவை முப்பதாகப் பூர்த்தி செய்து 2014.09.27 துல்-ஹிஜ்ஜஹ்வின் முதல் நாள் என அறிவித்தது.
இதனாலேயே இலங்கையில் இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டதென்பது யதார்த்தம். இலங்கையில் மட்டுமல்ல இந்தியாபாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளும் இலங்கையுடனே இம்மாதத்தை ஆரம்பித்தது. உலக நாடுகளிள் சஊதி மற்றும்; சில அரபு நாடுகளில் சனிக்கிழமையும்இன்னும் இந்தோனேசியா தென்னாபிரிக்கா மலேசியா போன்ற நாடுகளில் ஞாயிற்றுக் கிழமையும் இலங்கை இந்தியா பாகிஸ்தான் பங்கலாதேஷ் போன்ற நாடுகளில் திங்கட்கிழமையும்இம்முறை ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
இவ்வித்தியாசம் இம்மாதம் மட்டுமல்ல ஒவ்வொரு மாதமும் நாட்டுக்கு நாடு பிறையின் வளரச்சி மற்றும் வானியல் கரணங்களினால் வித்தியாசம் ஏற்படும் என்பதை அதைப்பற்றிய அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்வர். இவ்வாறு இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்படுவதற்கு சாத்தியங்கள் உள்ளன என்பதை துறை சார்ந்தவர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள் என்பது மற்றுமின்றி அதுவே உலக நாடுகளில் நடைமுறையில் உள்ளது என்பதும் கண்கூடு.
எனவே, இதுபற்றி வீனான சந்தேகங்களை ஏற்படுத்திக்கொள்ளாது இபாத்களிலும் உழ்ஹிய்யாவின் விடயங்களில் கவனம் செலுத்துவதோடு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான இச்சூழலை முஸ்லிம்களுக்கு சாதகமாக மாற்றித்தர இறைவனைப் பிரார்த்திக்குமாறும்,சமூக ஒற்றுமை, சகவாழ்வு விடயங்களில் கூடிய அக்கரை செலுத்துமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் மக்களை வேண்டிக்கொள்கிறது.
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர்
பிறைக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா