நாட்டில் உள்ள அனைத்து அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கும் ஏதிர்வரும் 7ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட் தாஜுடீன் தெரிவித்துள்ளார்.
இவ்விஷேட விடுமுறையானது கொழும்பு பெரிய பள்ளிவாசலின் வேண்டுகோளின் பேரிலும், முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் வேண்டுகோளுக்கிணங்கவும் முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் ஹஜ்ஜுப் பெருநாள் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றவும் பெருநாளை சந்தோஷமாக கொண்டாடவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரையின் பேரில் கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது.
நாடுபூராகவும் உள்ள 885 முஸ்லிம் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள இவ்விஷேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 11ஆம் திகதி (சனிக்கிழமை) முஸ்லிம் பாடசாலைகள் மாத்திரம் நடாத்தப்பட வேண்டுமெனவும் அதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டுமெனவும் பணிப்பாளர் இஸட் தாஜுடீன் அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.meelparvai