Jul 18, 2014
ஞானசாரரின் அவுஸ்திரேலியா வீசா அதிரடியாக ரத்து
Posted by AliffAlerts on 15:30 in NL | Comments : 0
அவுஸ்திரேலியா அரசாங்கம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரின் வீசாவை அதிரடியாக ரத்துச் செய்துள்ளது.
இலங்கையில் சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவாக மாற்றப்பட்டுள்ள பொதுபல சேனாவின் ஞானசார தேரர் இந்த மாத இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
இதன்போது அவர் அவுஸ்திரேலியாவில் சமய நிகழ்வுகளில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள பௌத்தர்கள் பலரும் ஞானசார தேரரின் வருகை இங்கு வாழும் சமூகங்ளுக்கிடையில் பிரிவினையை ஏற்ப்படுத்தக் கூடும் என்னும் அச்சத்தில் இவரின் வீசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் பிக்குவின் வருகைக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பௌத்தர்களுடைய சுயகௌரவம், பாதுகாப்பு என்வற்றை உறுதிப்படுத்த வேண்டுமானால் ஞானசார தேரரின் வீசாவை ரத்து செய்ய வேண்டும் என்றும், குறித்த பௌத்த பிக்கு பேசுகின்ற விடயங்கள் மற்றும் அவரின் நடவடிக்கைகள் ஒருபோதும் பௌத்த மத வளர்ச்சிக்கு உதவாது என்பதே அவுஸ்திரேலிய வாழ் பௌத்தர்களின் கருத்தாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஞானசார தேருக்கான வீசாவை வழங்க மறுத்துவிட்டமை தெரிந்ததே.