BREAKING NEWS

Jul 23, 2014

தலாய் லாமா பௌத்தர்களின் தலைவரல்ல – ஞானசாரர்

உலகம் போற்றும் ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான தலாய் லாமாவை ஆன்மீகத் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது என பெளத்த கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பௌத்தர்கள் முஸ்லிம்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடக் கூடாது என தலாய் லாமா அண்மையில் கோரியிருந்தார். இந்த கோரிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட போது கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலக நாடுகள் தலாய் லாமாவை பிழையாக வழிநடத்தி வருகின்றன. கிறிஸ்தவர்களின் தலைவராக பாப்பாண்டவர் கருதப்பட்டது போன்று, தலாய் லாமாவை உலக பௌத்த தலைவராக அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிரச்சார வலையில் தலாய் லாமா சிக்கியுள்ளார். இலங்கையில் முஸ்லிம் எங்கு தாக்கப்படுகின்றார்கள் என தலாய் லாமாவிடம் கேட்க விரும்புகின்றோம். முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் சில ஆங்கில ஊடகங்கள் சம்பவத்தை திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளதாகவும் ஞானசாரர் தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &