சியோனிச ஆக்கிரமிப்பு படையின் தாக்குதல்கள் உச்சகட்டத்தை அடைத்துள்ளது இது வரை 650 இக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் சியோனிச பேய்களினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 4000 பேர் படுகாயம்
அடைத்துள்ளனர் . அதிகமானவர்கள் கால் ,கை ,கண் போன்ற அவயவங்களை இழந்துள்ளனர் . கொல்லப் பட்டவர்களில் அதிகான சிறுவர் ,சிறுமியர் , பெண்கள் அடங்குகின்றனர் .
சர்வதேச யுத்த விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படும் யுத்தம் ஒன்றை இஸ்ரேலியர் முன்னெடுத்து வருவதாக காஸாவின் மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
யுத்த குற்றம் மீதான விசாரணை
காஸா மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில்இ இஸ்ரேல் போர்க் குற்றங்களை இழைத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்த மோதல்களின்போது பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டன என்று இஸ்ரேல் கூறுவது தொடர்பில்சந்தேகங்கள் உள்ளன என்று நவி பிள்ளை கூறியுள்ளார்.
இந்த மோதல்களின்போது பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டன என்று இஸ்ரேல் கூறுவது தொடர்பில்சந்தேகங்கள் உள்ளன என்று நவி பிள்ளை கூறியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டியுள்ள அவர் அது சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் எந்த அளவுக்கு துச்சமாக மதிக்கப்பட்டன என்பதை அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் வெளிக்காட்டியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐநா மனித உரிமைகளுக்கான அவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இஸ்ரேலிய தாக்குதல்கள் யுத்த குற்றமாகலாம் எனத் தெரிவித்ததை தொடர்ந்து மனித உரிமைகள் அவை யுத்த குற்றங்கள் தொடர்பான சுதந்திர விசாரணை ஒன்றுக்கு வழிவகுக்கும் பிரனைனை ஒன்றின் மீது வாக்களித்துள்ளது , இந்த பிரேரணையை பலஸ்தீன் முன்மொழிந்துள்ளது இதற்கு ஆதரவாக 29 நாடுகளும் எதிராக 17 நாடுகளும் வாக்களித்துள்ளன .அமெரிக்கா மற்றும் இன்னும் சில மேற்கு நாடுகள் இதற்கு ஏதிராக வாக்களித்துள்ளன .
யுத்தத்தை நிறுத்த பான்கீ மூன் முயற்சி
ஐநா பான் கீ மூன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு தேவையான நடவடிக்கைளை எடுத்து வருவதாக அறிவிக்கப் படுகிறது , இஸ்ரேல் ஹாமாஸ் தாக்குதல்களை நிறுத்தினால் நிபந்தனை அற்ற யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு தயார் என சொல்கின்றது , ஹமாஸ் யுத்தம் நிறுத்தம் ஏற்பட வேண்டுமானால் அது தொடர்பான பேச்சில் காஸா மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு ஏற்படுத்தியுள்ள முற்றுகை தொடர்பிலும் பேசப் படவேண்டும் என அறிவித்துள்ளது .
எதிரியின் இழப்புக்கள்
ஹமாஸின் ஏவுகுண்டுகள் இஸ்ரேலின் முக்கிய மையங்களை தாக்கிவருகிறது , காஸா போராளிகள் காஸாவுக்குள் உள்நுழைந்துள்ள சியோனிச படையை எதிர்த்து கடுமையாக போராடிவருகின்றனர் . சியோனிச பேய்கள் பலஸ்தீன சிறுவர்களையும் பெண்களையும் மனித கேடயங்களாக பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது . இதுவரை 31 சியோனிச சிப்பாய்கள் கொல்லபட்டுள்ளனர் ஒருவன் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளான் . இரண்டு ஆக்கிரமிப்பு குடியேற்ற காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் , 70 வரையான இஸ்ரேலிய சிப்பாய்கள் காயம் அடைத்துள்ளனர் இவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் .
காஸா மக்களை அழிக்குமாறு யூத மத பத்வா
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு யூத மத ‘அறிஞரான’ டொவ்லியர் என்வர் காஸாவை அழித்து அம்மக்களை கொன்றொழித்து விடுமாறு மத தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.