BREAKING NEWS

Jul 23, 2014

இன்னுமொரு விமானம் தாய்வானில் விபத்து.



தாய்வானில் பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
டரான்ஸ் ஆசியா என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று 54 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்தபோது அவசரமாக தரை இறங்கும்போது விபத்துக்குள்ளானதாக தாய்வான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த விபத்தில் 51 பேர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 17ஆம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பேருடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், உக்ரைனில் கிழக்கு பகுதியில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &