BREAKING NEWS

Jul 23, 2014

இலங்கையில் முஸ்லிம் இராணுவம் மட்டுமே இல்லை அதையும் உருவாக்கி விடுவார்கள் – BBS

BBS accuses government
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகளின் சகல செயற்பாடுகளும் உள்ளன.  இன்றும் முஸ்லிம்களுக்கென்று இராணுவம் மட்டுமே இல்லாதுள்ள  இன்னும் சிறிது காலத்தில் அவற்றினையும் உருவாக்கி விடுவார்கள் என
தெரிவிக்கும் கலகொட அத்தே ஞானசார தேரர் பொதுபல சேனா அமைப்பிற்கு அவுஸ்திரேலிய விசா தடை செய்யக் கோருகின்றமையின் பின்னணியில் அவுஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களே காரணம் எனவும் குற்றம் சுமத்தினார்.
பொதுபல சேனா பெளத்த அமைப்­பினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவ் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
தொடர்ந்தும் அவர் குறிப்­பி­டு­கையில்;
நாட்டில் முஸ்லிம் தீவி­ர­வாதம் மிக வேக­மாக பரவி வரு­கின்­றது. பெளத்த சிங்­கள மக்­களை குறி வைத்து தாக்­கு­வதில் முஸ்லிம் தீவி­ர­வா­திகள் மும்­மு­ர­மா­கவே உள்­ளனர். இலங்­கையில் பெளத்த மக்­க­ளுக்கு எதி­ராக முஸ்லிம் தீவி­ர­வாதம் பரவி வரு­கின்­ற­மை­யினை சுட்­டிக்­காட்­டினால் அது முஸ்லிம் மக்­க­ளுக்கு வலிக்­கின்­றது.
எமது கைகளில் இரத்தம் பட­வில்லை முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக பொது­ப­ல­சேனா ஒரு­போதும் செயற்­ப­ட­வில்லை. எம்மை ஆத­ரிக்கும் பல முஸ்­லிம்கள் இன்று எம்­முடன் இருக்­கின்­றனர். எமது கைகள் இரத்­தக்­கறை படாத புனி­த­மான கைகள். இது வன்­மு­றை­களை ஆத­ரிக்­காத கைகள். பெளத்­தர்கள் எப்­போதும் பொறு­மை­யினை கடைப்­பி­டிப்­ப­வர்கள். எமது பொறுமை நாட்டில் அமை­தியை ஏற்­ப­டுத்த வித்­திட்­டுள்­ளது. இலங்­கையில் பெரும்­பான்­மை­யான பெளத்­தர்கள் இருக்­கின்­றனர். ஆனால் ஏனைய இனங்­க­ளுக்கும் சம உரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் முஸ்­லிம்­களை பெரும்­பான்­மை­யாக கொண்ட நாடு­களில் ஒரு நாட்­டி­லேனும் அமை­தி­யான சூழல் நில­வ­வில்லை. அதேபோல் சிறு­பான்மை இனத்­தவர் அங்கு சுதந்­தி­ர­மா­கவும் இல்லை. அதே நிலைமை இலங்­கை­யிலும் ஏற்­ப­டுத்­தவே முஸ்லிம் மத­வா­திகள் முயற்­சிக்­கின்­றனர்.
அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் எமக்கு எதி­ரான தீவி­ர­வா­திகள்
அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு நாம் செல்­வது தடை செய்­யப்­பட வேண்டும். எமக்­கான அவுஸ்­தி­ரே­லிய விசாவை தடை செய்ய வேண்டும் என அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள சில அமைப்­புகள் தெரி­வித்­துள்­ளன. அவை யார் என தேடிப்­பார்த்தால் அங்கும் முஸ்லிம் தீவி­ர­வாத அமைப்­பு­களே செயற்­பட்­டுள்­ளன. அவுஸ்­தி­ரே­லி­யாவில் இயங்கும் முஸ்லிம் மத­வாத அமைப்­பு­களில் குறிப்­பிட்ட சில அமைப்­புக்கள் அவுஸ்­தி­ரே­லிய அர­சுக்கு இக்­கோ­ரிக்­கை­யினை முன் வைத்­துள்­ளன. அவர்­களின் பெயர் விபரங்கள் எமக்குக் கிடைத்­துள்­ளன. ஆனால் இதை நாம் பெரி­து­ப­டுத்­தப்­போ­வ­தில்லை. நாம் அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு செல்ல வேண்­டிய அவ­சி­யமும் இல்லை. எமக்கு இலங்கை என்ற சுதந்­தி­ர­மா­னதும் அமை­தி­யா­ன­து­மான அழ­கான நாடு உள்­ளது. இங்கு வாழ்­வதை நாம் புனி­த­மாக நினைக்­கின்றோம். அதேபோல் அவுஸ்­தி­ரே­லிய எல்­லைக்குள் அவர்கள் எதை வேண்­டு­மா­னாலும் செய்ய முடியும். ஆனால் இலங்­கைக்குள் முஸ்லிம் தீவி­ர­வா­தி­களின் செயற்­பா­டுகள் செயற்­ப­டு­மாயின் அதற்கு ஒரு­போதும் நாம் அனு­ம­திக்­க­மாட்டோம்.
முஸ்லிம் இரா­ணு­வ­மொன்று உரு­வாகும்
இலங்­கையில் முஸ்லிம் தீவி­ர­வா­தி­களின் சகல செயற்­பா­டு­களும் உள்­ளன. உலமா சபைகள்இ சூரா சபைகள், முஸ்லிம் அமைப்­புகள் என பல முஸ்லிம் மத­வாத அமைப்­புக்கள் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. இன்றும் முஸ்­லிம்­க­ளுக்­கென்று இரா­ணுவம் மட்­டுமே இல்­லா­துள்­ளது. இன்னும் சிறிது காலத்தில் அவற்­றி­னையும் உரு­வாக்கி விடு­வார்கள். ஆரம்ப காலங்­களில் இருந்த இறுக்­க­மான கொடூ­ர­மான மத விட­யங்­களை இன்றும் பின்­பற்றிக் கொண்டு அதற்­கேற்­பவே இவர்கள் வாழ்­கின்­றனர். இன்று சமூகம் மாற்­ற­ம­டைந்து கொண்டு செல்­கின்­றது. ஆனால் இன்­னமும் இவர்கள் இஸ்­லா­மிய கொள்­கை­களில் ஒடுக்­கப்­பட்ட மற்­றைய சமூ­கங்­க­ளையும் அதில் திணிக்க முயற்­சிக்­கின்­றனர்.
விடு­த­லைப்­பு­லி­க­ளைப்போல் முஸ்லிம் தீவி­ர­வாதம்
அன்று விடு­த­லைப்­பு­லிகள் பெளத்த சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­ட­தைப்போல் இன்று முஸ்லிம் தீவி­ர­வாதம் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. அமைப்­புக்­க­ளையும் இயக்­கங்­க­ளையும் உரு­வாக்­கிக்­கொண்டு இந்த நாட்­டிற்கு எதி­ராக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். இவர்­களின் மோச­மான செயற்­பாட்­டினால் அப்­பாவி முஸ்லிம் மக்­களும் தண்­டிக்­கப்­ப­டு­கின்­றனர் என்­பதை மறந்து விட வேண்டாம்.
மருந்து வகை­களில் கலப்­படம்
தீவி­ர­வாத முஸ்லிம் அமைப்­புக்கள் தமக்கு தேவை­யா­னதை நிறை­வேற்றிக் கொள்ள எதையும் செய்யும் நிலை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இன்று இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் மருந்து வகை­க­ளிலும் கலப்­படம் செய்­யப்­பட்டு இந்த சிங்­கள சமூ­கத்தை அழிக்­கின்­றனர். அண்­மையில் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட மருந்து நிறு­வ­னத்தில் இருந்து 50 கோடி ரூபாய் பெறு­ம­தி­யான மருந்து வகைகள் தடை செய்­யப்­பட்­டன. ஆனால் அந்த நிறு­வ­னத்­திற்கு எதி­ராக இது­வ­ரையில் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. நாட்டில் முஸ்­லிம்கள் தவறு செய்தால் சாதா­ரண விட­ய­மாக மாறி விட்­டது. அதை பெளத்தர் எவ­ரேனும் தட்­டிக்­கேட்டால் இன­வா­த­மாக மாறி விடு­கின்­றது.
அளுத்­கம சம்­பவம் தொடர்பில் உண்மை என்னவென்று தெரியாது சம்பந்தன் ஹக்கீம் உட்பட பலர் வாதம் நடத்தி எம்மை குற்றவாளியாக்குகின்றனர். ஆனால் முஸ்லிம்கள் செய்யும் தவறை எவரும் சுட்டிக்காட்டுவதில்லை.
பொது­ப­ல­சேனா தொடர்பில் தவ­றான கருத்­துக்­களை முஸ்லிம் அமைப்­புக்கள் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் பரப்­பு­வ­தனால் நாம் வருத்­த­ம­டை­கின்றோம். இவர்கள் நாட்­டிற்கு செய்யும் துரோ­கத்­திற்கும் சிங்­கள பெளத்த மக்­க­ளுக்கு செய்யும் அநி­யா­யங்­க­ளுக்கும் நாம் தண்­டிக்­கப்­போ­வ­தில்லை. அல்­லாஹ்வே இவர்­க­ளுக்கு தண்­டனை கொடுப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.-TC

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &