
காஸா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதுவரை ஷஹீதானவர்களின் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் குழந்தைகளும் பெண்களும் வயோதிபவர்களுமாவர்.
அதேவேளை இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீனப் போராளிகள் கடுமையான ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரேலின் பல்வேறு பெரு நகரங்கள் மீது போராளிகள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இஸ்ரேலின் மிகப் பாதுகாப்பான பகுதிகளை ரொக்கட்டுகள் தாக்கியுள்ளன. இஸ்ரேலியப் பாராளுமன்றும், நெதன்யாஹுவின் வாசஸ்தலம், இஸ்ரேலின் பெரிய அணு உலை போன்றவற்றுக்கு நெருக்கமாக ரொக்கட்டுகள் தாக்கியுள்ளன.
அதேநேரம் இஸ்ரேலின் மிகப்பெரிய விமானநிலையமான பென்குரியன் விமானநிலையத்தின் மீது எம் 75 ரகத்திலான நான்கு ரொக்கட்டுகளை ஏவியுள்ளதாக கஸ்ஸாம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்தின் விமான போக்குவரத்துகள் தற்காலிகமாக தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேலின் பிரபல நாளேடான ”யெத்யூத்”செய்தி வெளியிட்டிருக்கிறது.
பலமில்லியன் டொலர்களை செலவில் இஸ்ரேல் மேற்கொண்ட ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை ஊடறுத்தே போராளிகள் ரொக்கட்டுகளை ஏவியுள்ளனர்.
இஸ்ரேலியர்களில் அரைவாசிக்கு அதிகமானோர் பெரும் பீதிக்கு மத்தியில் பாதுகாப்பான இடங்களில் தஞ்மடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போராளிகளின் ரொக்கட் தாக்குதலால் ஏற்பட்டசேதவிபரங்கள் இஸ்ரேல் மறைத்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகள் யுத்த நிறுத்தத்திற்கு உடன்படுமாறு பலஸ்தீன போராளிகளை கோரிவருகின்றன. யுத்தநிறுத்தம் செய்வதற்கு ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது.
இஸ்ரேலிய நாளேடான ”யெத்யூத் அஹ்ரனுாத்” இற்கு கருத்து தெரிவித்த முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டொனிபிளயர் ”இஸ்ரேலுக்கு ஹமாஸை அழிக்கும் ஆற்றல் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது போராளிகள் மேற்கொண்ட ரொக்கட் தாக்குதலினால் ஏற்பட்டசேதங்களை சில இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அவற்றில் சில



