
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய யூத பயங்கரவாதிகளால் பச்சிளம் குழந்தைகள் முதல் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டு வரும் நிலையில் அரபு நாடுகளில் முதன் முறையாக வாய் திறந்த பஹ்ரைன்.(ஜெஸாக்கல்லாஹ் ஹைரன் )
பஹ்ரைன் பாராளுமன்றத்தில் இஸ்ரேல் கொடி எரிப்பு !
பஹ்ரைன் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையே இஸ்ரேலின் கொடி தீக்கிரையாக்கப்பட்டது.பாராளுமன்ற கூட்டம் நடக்கும் பொழுது உஸாமா முஹன்னா இஸ்ரேல் கொடியை தீவைத்துக் கொளுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற ஹாலில் புகை நிறைந்தது நடவடிக்கைகளை சபாநாயகர் நிறுத்தி வைத்தார். அனைவரது கவனத்தையும் ஈர்க்கவே கொடியை எரித்ததாக உஸாமா தெரிவித்தார்.
காஸ்ஸா மக்களுக்கு அனைத்து ஆதரவுகளையும் அளிப்போம் என்றும், இஸ்ரேலின் கொடூரதாக்குதல்களை கண்டிப்பதாகவும் அஹ்மத் அல் ஸாத்தி எம்.பி கூறினார். பாராளுமன்றத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்போம் என்று சபாநாயகர் கலீஃபா அல் தஹ்ரானி கூறினார்.
பார்வையாளர்கள் மற்றும் எம்.பிக்கள் கடுமையான பரிசோதனைக்குப் பிறகே பாராளுமன்றத்தில் அனுமதிக்க ப்படுகின்றனர். ஆனால், தண்ணீர் கொண்டு வரும் பாட்டிலில் எரிபொருளை கொண்டுவந்து எம்.பி கொடியை எரித்துள்ளார் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.