கம்பஹா – மீகஹவத்தை – பொல்ஹேன சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
ட்ரக் வண்டியொன்று வேனுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் சம்பவத்தில் வேனில் சென்ற மூவரே பலியாகியுள்ளனர்.
வேன் சாரதி மற்றும் ட்ரக் சாரதி உள்ளிட்ட மூவர் இதன்போது காயமடைந்த நிலையில் கம்பஹா மற்றும் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மீஹகவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பட உதவி: லங்காதீப