தான் தேசிய அணியின் தலைராக இருந்த காலத்திலிருந்தே தொடர்ந்து தன் மீது தேவையில்லாத அழுத்தத்தைத் தந்து வரும் சிரிக்கட் சபை அதிகாரியினால் தான் பாரிய மன அழுத்தத்துக்குள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளார் இலங்கை கிரிக்கட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் குமார சங்கக்கார.
இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு லசித் மலிங்கவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்தே சங்கக்காரவின் குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.