யுத்த காலங்களில் அமெரிக்க பாவனைக்காகவும் அதேவேளை இஸ்ரேலிய தேவைகளுக்காகவும் இஸ்ரேலிய மண்ணில் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க ஆயுதங்களை உபயோகிக்க கடந்த வாரம் இஸ்ரேலுக்கு பென்டகன் அனுமதி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோர்டார் குண்டுகள், கிரனேடுகள் உட்பட ஆயுதங்கள் இங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் தமது அவசரத்தேவைகளுக்காக அதிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது அமெரிக்க இணக்கப்பாடு எனவும் பென்டகன் ஊடக செயலாளர் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அவ்வகையான ஒரு அவசர தேவை எதுவும் அற்ற நிலையிலேயே கடந்த 10 தினங்களுக்கு முன்பாக இஸ்ரேல் ஆயுதங்களைக் கோரியிருப்பதும் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இறுதியாக வெளியாகியிருக்கும் பலஸ்தீன உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் இதுவரை 1361 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 6800 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.