அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் புனரமைக்கப்பட்ட 100 வீடுகள் மற்றும் 7 கடைகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவான் வணிக சூரிய தெரிவித்தார்.
இதேவேளை குறித்தப் பகுதிகளில் சேதமாக்கப்பட்ட மீதமுள்ள 103 வீடுகள் மற்றும் 25 கடைகள் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இன வன்முறைகளில் 210 வீடுகள் மற்றும் 84 கடைகள் சேதமாக்கப்பட்டதாக கணக்கெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.