BREAKING NEWS

Apr 9, 2013

11 கிலோ நிறையைக் குறைத்து நோயாளியான பரத்

இயக்குனர் சசி இயக்கத்தில் 555 எனும் படத்தில் நடிக்கும் பரத் கதைக்காக 2 நாட்களாக நீர் கூட அருந்தாமல் 11 கிலோ கிராம் உடல் நிறையைக் குறைத்து நோயாளியாக நடித்துள்ளார்.


555 படத்தில் பரத் 3 வேடங்களில் 3 கதாபாத்திரங்களில் நடிக்கிறார். சாதாரண சொக்லேட் பையனாகவும் ஒரு பாத்திரத்தில் தாடி-மீசையுடன் ஒரு கதாபாத்திரத்திலும் இதுவரை நடித்துள்ளாராம் பரத்.


தற்போது 3ஆவது கதாபாத்திரமான நோயாளி கதாபாத்திரத்திற்காகவே மொட்டை போட்டுள்ளார். மேலும் 74 கிலோ கிராமாக இருந்த பரத் இரண்டு நாட்களாக நீர்கூட அருந்தாமல் 11 கிலோ கிராமினைக் குறைத்துள்ளாராம்.


இது குறித்து பரத் கூறுகையில், கடந்த ஒரு வருடமாக தாடி-மீசை மற்றும் தலைமுடியை நீளமாக வளர்த்து வந்தேன். வாழ்க்கையை பறிகொடுத்த தோற்றம் வரவேண்டும் என்பதற்காக, பட்டினி கிடந்தேன். கடந்த ஒரு வருடமாக சரியான சாப்பாடு கிடையாது. ஜிம்மில் 6 மணி நேரம் இருந்தேன்.


மொட்டையுடன் தோன்ற வேண்டும் என்பதற்காக தாடி-மீசையை எடுத்து, தலைமுடியை மொட்டை போட்டுக்கொண்டேன். ஒரு நோயாளி போன்ற தோற்றம் வேண்டும் என்பதற்காக, மொட்டை போடுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு, தண்ணீர் குடிப்பதைக் கூட நிறுத்தி விட்டேன். இதனால் 75 கிலோவாக இருந்த எனது உடல் நிறை 64 கிலோவாக குறைந்துவிட்டது என்றார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &