BREAKING NEWS

Apr 9, 2013

பொன்சேகா விற்கு பொருளாதார அறிவு கிடையாது: விக்கிலீக்ஸ்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு போதியளவு பொருளாதார அறிவு கிடையாது என அமெரிக்கா கருதியதாக விக்கிலீக்ஸ் இணையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்கா இவ்வாறு சரத் பொன்சேகாவின் பொருளாதார அறிவு குறித்து கருத்து வெளியிட்டுள்ளது.

ஊழல் மோசடிகளுக்கு எதிராக போராடப் போவதாக தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அறிவித்த போதிலும் தெளிவான பொருளாதாரக் கொள்கைகள் எதுவும் சரத் பொன்சேகாவிற்கு கிடையாது என அமெரிக்க பிரதித் தூதுவர் ரெபெக்கா சொன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் பரந்த அறிவு கிடையாது என்பதனை சரத் பொன்சேகா பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்கால பொருளாதாரத் திட்டங்கள் குறித்து கலந்துரையாட சரத் பொன்சேகா நாட்டம் காட்டவில்லை என ரெபேக்கா தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &