தமிழ் நாட்டு திரைப்படங்களை தடை செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை ராவண சக்தி அமைப்பினால் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்திடம் விடுக்கப்பட்டுள்ளது.
.
அவ்வாறு தடை செய்யப்படாத விடத்து அதன் பின்னர் தாங்கள் கவனித்துக்கொள்வதாகவும் அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்த சந்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக நடிகர்கள் அண்மையில் ஈடுபட்டனர். இதனால் இவர்களின் படங்கள் இலங்கை காட்சிப்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என ராவண சக்தி அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பான மகஜரொன்று இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன பிரதிநிதிகளிடம் ராவண சக்தி அமைப்பினால் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.
அத்துடன் இது தொடர்பில் திரையரங்குகளின் உரிமையாளர்களை சந்தித்து விளக்கமளிக்கவுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Apr 9, 2013
தமிழ் நாட்டு திரைப் படங்களை தடை செய்யவும் – ராவண சக்தி
Posted by AliffAlerts on 14:58 in NL | Comments : 0
