பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குர்ஆனை அவமரியாதை செய்தார் என முஸ்லிம் சமய விவகார ஆணையாளர் நாயகம் நீதி மன்றத்துக்கு தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டே நீதிமன்றில் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். ஞானசாரர் அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து முஸ்லிம் மக்களின் புனித நூலான குர்ஆனை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்திருந்தது என தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டே நீதவான் திலின கமகேயினல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய முஸ்லிம் சமய விவகார ஆணையாளர் நாயகம், கலபொடத்தே ஞானசாரரின் கருத்துக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
ஞானசாரரின் கருத்துக்கள் குர்ஆனை இழிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதா என விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான், முஸ்லிம் சமய விவகார ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.