நேற்று முந்தினம் சிங்கள மொழி தெரன தொலைகாட்சியில் வாதபிடிய அரசியல் விவாத நிகழ்ச்சி இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர மற்றும் ஐக்கிய தேசியகட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பு வரை சென்றுள்ளது.
நிகழ்ச்சியின் இடைநடுவே வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர ஐக்கிய தேசியகட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்களுடன் சேர்ந்து இரவு கேளிக்கை விடுதிகளுக்கு செல்வதாகவும் விடிய விடிய மதுஅருந்துவதாக குற்றம் சுமத்தினார் இதனை தொடர்ந்து ஜனாதிபதியின் மகனை பற்றி அரசாங்கத்தை சேர்ந்த முதலமைச்சர் குறை கூறுகிறார் என்ற ரீதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ தர்க்கம் செய்ய வாக்குவாதம் முற்றி விளம்பர இடைவேளைக்கு சென்றார் நிகழ்ச்சியை நடத்திய சதுர அல்விஸ்.
விளம்பர இடைவேளைக்கு பின்னர் நிகழ்ச்சி தொடங்கவே இல்லை தேசிய கீதத்துடன் ஒளிபரப்பு முடிவுக்கு வந்தது.
விளம்பர இடைவேளையின் போது திரைக்கு பின்னால் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர ஐக்கிய தேசியகட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ ஆகியோருக்கிடையில் வாக்குவாதம் முற்றி கைகளப்பு வரை சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.