காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்ற மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்கவை, எதிர்க்கட்சியின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று மாலை (28) பார்வையிட்டார்.
இரத்தினபுரி - ஹொரணை வீதியில் கிரியல்ல எனும் இடத்தில் இன்று பகல் (28) அவர் பயணித்த கெப் ரக வாகனமும் டிப்பர் ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியே விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த அவர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.