மன்னார்-மறிச்சிக்கட்டி வவுனியா சாளம்பைக்குளம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல கிராமங்களில் வாழ்ந்து வந்த முஸ்லீம் மக்களினது வாக்கு பதிவுகள் வாக்கு பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.
வன்னிமாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிசாட் பதியுதீனை நேற்று முன்தினம் தேர்தல்கள் ஆணையாளர் சந்தித்து உரையாடயபோதே மேற்படி உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
2014 ஆம் ஆண்டிற்கான வாக்காளர்களை பதிவு செய்யும் பணிகளின் போதே இப்பெயர்கள் நீக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது. பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலேயே அமைச்சர் ரிசாட் தேர்தல் ஆணையாளரை சந்திததிருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதி தேர்தல் ஆணையாளர் மொகமட் மற்றும் மன்னார் வவுனியா முல்லைத்தீவு புத்தளம் ஆகிய மாவட்டங்களின் உதவி ஆணையாளர்களும் இச் சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
யுத்தத்தின் நிமித்தம் தமது ப10ர்வீக இருப்பிடங்ளை விட்டு இடம்பெயர்ந்த வன்னி மாவட்டத்தில் உள்ள மக்களின் வாக்கு பதிவுகள் உள்வாங்கப்படாமல் போயிருந்தால் அவற்றை அவர்களின் சொந்த இடங்களிலேயே மீள் பதிவு செய்யப்படுதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் அடுத்த மாதம் ஆரம்ப பகுதியில் மேற்படி பிரதேசங்களுக்கு நேரடியாக செல்லவுள்ளதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தார்.
இது தவிர புத்தளம் அகதி முகாமில் இருக்கும் ஒருவர் அவரது வாக்கை மேலதிக இணைப்புபட்டியலில் பதிவு செய்து அவர் புத்தளத்தில் இருக்கதக்கதாக அவரது பெயர் அவரது சொந்த இடத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இணைக்க இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுகின்றது.
தமது வாக்கு கடந்த ஜுன் மாத பதிவின் போது உள்வாங்கப்படவில்லை என எவரும் அச்சமடைய தேவையில்லை. எதிர் வரும் நவம்பர் மாதம் விசேட இணைப்புபட்டியலில் பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
எனவே இன்றிலிருந்தே தமக்கு அருகில் உள்ள பள்ளி வாசல் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தத்தமது பெயர்களை பதிவு செய்யலாம.;