ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு நேரப்படி காலை 2.32 மணிக்கு பசிபிக் கடலில் உள்ள வட கிழக்கு பகுதியான ஹொக்கைடோ தீவுகளில் 60 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏதுமில்லை என்று தெரிய வந்துள்ளது. இத்தீவு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள குரில் தீவுகளுக்கு அருகில் உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.