பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு எதிராக 24 மணித்தியாலங்களுக்குள் 2 லட்சம் முறைப்பாடுகள் FACEBOOK நிர்வாகத்துக்கு கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் ஆசிய நாடுகளில் இருந்தே அதிக முறைப்பாடுகள் கிடைத்தன. இந்தநிலையில் பொதுபல சேனாவின் வாசகர் பக்கத்துக்கு எதிராக மொத்தமாக 50 லட்சம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பங்களாதேஸ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்த மதத்துக்கு எதிராகவும் தாம் FACEBOOK பயன்படுத்தவில்லை என்று ஞானசாரர் FACEBOOK நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளாராம் .