BREAKING NEWS

Jul 29, 2014

பிரதமர் தி. மு. ஜயரத்னவின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி


இஸ்லாம் பக்தர்களான முஸ்லிம்களிடையே சமத்துவம் மற்றும் சகவாழ்வினை உறுதி செய்து, சமாதானமாக வாழ்வதற்கான வழிகாட்டியாக இருக்கும் புனித அல் குர்ஆன் இறக்கப்பட்ட மாதமாகவும் சமத்துவத்தின் தினமாகவும் நினைவுகூரப்படும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் முஸ்லிம்களுக்கு பக்தி கமழும் மனதுடன் வாழ்த்துச் செய்தியினை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

இவ்வாறு பிரதமர் தி. மு. ஜயரத்
ன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
ரமழான் நோன்பினை ஒரு மாத காலம் நோற்றதன் பின்னர் ஸவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படுவதுடன் உதயமாகும் உன்னத நோன்புப் பெருநாள் தினத்தில் சமூகத் தில் வாழும் எவரும் பசியுடன் இருக்கக் கூடாது என நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் மனதில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும்.

ஆன்மீக செளபாக்கியமிக்க ஆரோக்கி யமிக்க வாழ்வுக்கு வழிசமைக்கும் நோன்பானது அல்லாஹ்வின் கட்ட ளைக்குக் கீழ்ப்படிந்து இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் மார்க்கக் கடமை என்ற போதிலும் அதனைச் சகல இனங்களுக் கிடையிலும் நல்லெண்ணத்தினை வளர்க்கும் கலாசாரப் பாலமாகவும் நோக்க வேண்டுமென்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தைரியமிக்க தலைமைத் துவத்தின் கீழ் சமாதானமாகவும் சகவாழ்வுடனும் வாழக்கூடிய சாதகமான ஒரு சூழல் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் இலங்கைவாழ் முஸ்லிம்களாகிய உங்கள் மீதும் எமது நாடு சம்பந்தமான பாரிய பொறுப்பும் கடமையும் சுமத்தப்பட்டுள்ளதென்பதனை இப்புனித தினத்தில் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்நாட்டில் வாழும் சகல இனங்களுக்கிடையிலும் சகவாழ்வு எனும் பிணைப்பினை மென்மேலும் பலப்படுத்தும் உன்னத குறிக்கோளினை அடைந்து கொள்வதற்கு உங்கள் அனைவருக்கும் சக்தியும் தைரியமும் கிடைக்க மனதாரப் பிரார்திக்கின்றேன்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &