ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க விபத்தொன்றில் சிக்கிய நிலையில்இ இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்தினபுரி – பாணந்துறை வீதியின்
ஹொலிப்பிட்டிய பிரதேசத்தில் 27-07-2014 மதியம் ஒரு மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜே.வி.பி தலைவர் பயணித்த வாகனம் மீதுஇட்ரக் வண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து காரணமாக ஜே.வி.பியின் தலைவருக்கு மார்பு பகுதியில் சிறிய உபாதை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் கூறியுள்ளனர்.
அவர் ஆபத்தான நிலையில் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதேவேளை அவர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார் என தகவல்கள் குறிப்பிடுகின்றன