இராண்டாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 110 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் சுபுன் விராஜ் ரந்தெனிய தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவர் 13.64 செக்கன்களில் போட்டி தூரத்தை கடந்துள்ளார்.
சுபுன் விராஜ் ரந்தெனிய இந்த போட்டியில் சாதனையை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வீரரான மலிங் உதய 14.41 செக்கன்களில் போட்டி தூரத்தை கடந்து இந்த போட்டியில் வென்கல பதக்கத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்தியாவின் ராஞ்சி நகரில் நடைபெறுகின்ற இராண்டாவது தெற்காசிய கனிஷ்டமெய்வலுனர் போட்டிகளின் இறுதி நாள் இன்றாகும்.