அந்த வகையில், டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ள தனது கான்செப்ட் மாடல்கள் பற்றிய விபரங்களை யமஹா முன்கூட்டியே வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் யமஹா அறிமுகம் செய்ய இருக்கும் புதிய கஃபே ரேஸர், ஸ்ட்ரீட்ஃபைட்டர் மற்றும் டர்ட் ரக எலக்ட்ரிக் பைக்குகள் ஆவலை ஏற்படுத்துவதாக உள்ளன.
கஃபே ரேஸர்
யமஹா போல்ட் அடிப்படையிலான புதிய கஃபே ரேஸர் பைக் கான்செப்ட் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தாழ்ந்த ஹேண்டில்பார், ஒற்றை இருக்கை உள்ளிட்டவற்றுடன் கவரும் இந்த மாடலில் 950சிசி ஏர்கூல்டு வி ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
ஸ்ட்ரீட்ஃபைட்டர்
பிஇஎஸ் - 1 என்ற குறியீட்டு பெயரில் இந்த புதிய எலக்ட்ரிக் கான்செப்ட் பைக் அறிமுகமாக உள்ளது. மோனோகாக் சேஸீயில் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதோடு, மிக ஸ்டைலாகவும் இருக்கிறது.
டர்ட் பைக்
பிஇடி - 1 என்ற பெயரிலான இந்த புதிய கான்செப்ட் மாடலும் மோனோகாக் சேஸீயுடன் எலக்ட்ரிக் பைக்காக வருகிறது.
ஸ்கூட்டர்
வெஸ்பா மாடல்களுக்கு போட்டியான டிசைனில் இ வினோ என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் யமஹா அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர, புதிய 3 சக்கர ஸ்கூட்டரையும் யமஹா அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.