78 விரல்களைக் கொண்ட மச் ரோபோ கிட்டார் வாத்தியம் இசைத்தும், 6 கரங்களில் 21 குச்சிகளை ஏந்தியிருந்த அஷுரா ரோபோ டிரம் வாத்தியத்தை இசைத்தும் கண்களிலிருந்து இலேசர் ஒளிக்கற்றையை வெளிப்படுத்தும் கொஸ்மோ என்ற ரோபோ பியானோ வாத்தியத்தை இசைத்தும் புதுமையான இசையை வழங்கின.
இந்த ரோபோக்களின் இசைக் குழுவானது டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் குழுவால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அஷுரா ரோபோ டிரம் வாத்தியத்தை இசைத்த வேகமானது மனிதர்கள் அந்த வாத்தியத்தை இசைக்கும் வேகத்துடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகமாகும்.