நேசன் இயக்கத்தில் விஜய், காஜல், மோகன் லால் நடிக்கும் திரைப்படம் ஜில்லா.
ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
தற்போது சென்னையில் ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள். இதனை முடித்த கையோடு அடுத்து மதுரைக்கு கிளம்புகிறார்கள். அங்கேயும் ஒரு பாடல்காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளார்கள்.
படப்பிடிப்பு ஆரம்பித்த மதுரையிலேயே படப்பிடிப்பை முடித்து பூசணிக்காய் உடைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
படத்தின் வசனப்பகுதி முழுவதும் படமாக்கப்பட்டு விட்டதால், ஒருபக்கம் படத்தின் டப்பிங் வேலைகளும் நடந்து கொண்டு இருக்கின்றன.
பொங்கல் வெளியீடு என்று அறிவித்துவிட்டதால் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது ஜில்லா.