நய்யாண்டி படத்தில் தொப்புள் காட்சி பிரச்சினையால் திக்குமுக்காடிப் போயுள்ளார் நஸ்ரியா.
இதுபற்றி நயன்தாரா கூறும்போது,
இதையெல்லாம் நஸ்ரியா பெரிதுபடுத்தக் கூடாது. சினிமாவில் கொமர்ஷியல் அம்சங்களுக்காக கவர்ச்சி காட்சியை இயக்குனர்கள் பயன்படுத்துவது சகஜம் என கருத்துத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நஸ்ரியா,
என் விடயத்தில் அவர் தலையிடுவதை நான் விரும்பவில்லை, நயன்தாராவின் அறிவுரையும் எனக்கு தேவையில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் இவர்களின் மோதலுக்கு பின்னணியில் இருப்பது ஆர்யா தான் என கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.
ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா என மூவரும் சேர்ந்து ராஜா ராணி படத்தில் நடித்தனர். இதில் நடித்தபோது ஆர்யா- நயன்தாரா இடையே நெருக்கம் ஏற்பட்டது.
அரைவாசி ஷ_ட்டிங் முடிந்த நிலையில், படத்தில் ஒரு முக்கிய கேரக்டருக்காக சேர்க்கப்பட்டவர் நஸ்ரியா. அவர் ஷ_ட்டிங் ஸ்பொட்டுக்கு வரும்போதெல்லாம் ஆர்யா அவரை ஜாலியாக கலாய்ப்பாராம்.
ஷ_ட்டிங் இடைவெளியில் நஸ்ரியாவுடன் கடலை போடுவாராம். அப்போது ஸ்பொட்டில் இல்லாத நயனுக்கு இது பற்றி படக் குழுவினர் தகவல் சொல்ல, அவர் கொதித்து போனாராம்.
ஆர்யாவை திருத்த முடியாது என்பதால், நஸ்ரியாவை நாசுக்காக எச்சரித்தாராம். அப்போது முதலே நயனுக்கும் நஸ்ரியாவுக்கும் இடையே பகை பற்றிக்கொண்டது என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
ராஜா ராணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கூட நயனுடன் நடித்த அனுபவம் பற்றி நஸ்ரியாவிடம் கேட்டபோது,
அனுபவம் எல்லாம் ஒன்றுமில்லை, அவரை சீனியர் நடிகையாக பார்க்கிறேன் என்று மட்டும் முகத்தை உம்மென வைத்தபடி கூறினார்.
சமயம் பார்த்து நய்யாண்டி மேட்டரில் நஸ்ரியாவை நயன் தாக்க, பதிலுக்கு நஸ்ரியா தாக்க இவர்கள் மோதல் விவகாரம் சூடு பிடித்திருக்கிறது.