BREAKING NEWS

Nov 11, 2013

செனல் - 4 குழு இலங்கை வருகை



இலங்கைக்கு எதிராக ஆவணப்படங்களை வெளியிட்ட செனல் - 4 வின் ஊடகவியலாளர் கெலம் மெக்கரே மற்றும் அவரது ஊடகக் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந் நிலையில் கெலும் மெக்கரே மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக விமான நிலையத்தில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூனின் ஊடகக் குழுவில் மக்கரேவும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &