BREAKING NEWS

Oct 19, 2013

ஆர்யாவை பாராட்டிய அஜித்

ஆரம்பம் படத்தில் ஆர்யா, டாப்சி இடம் பெறும் காட்சிகள் இளமை துள்ளலாக இருப்பதாக பாராட்டியுள்ளார் அஜித்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடிப்பில் உருவான ஆரம்பம் படத்தின் பிரத்தியேக காட்சி தணிக்கை அதிகாரிகளுக்காக நேற்று சென்னையில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது.

படத்தை பார்த்து 'யு' சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் படத்தை பற்றி ஏகமனதாக பாராட்டினார்களாம்.

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை வீரம் படத்தின் இடைவிடாத படப்பிடிப்புக்காக ஹைதராபாத் செல்ல உள்ள அஜித்தின் வேண்டுக்கோளுக்கு இணங்க தயாரிப்பு நிறுவனம் ஒரு பிரத்தியேக காட்சியை திரையிட்டுள்ளது.

இதில் அவரது குடும்பத்தினர், தயாரிப்பாளர் ஆகியோர் படம் பார்த்தனர். படத்தை மிகவும் ரசித்த அஜித், காட்சி முடிந்தவுடன் இயக்குனர் விஷ்ணுவர்தனை மனமார பாராட்டியுள்ளார்.

அதற்கு பின்னர் ஆர்யாவை தொலைபேசியில் நலம் விசாரித்ததோடு தன் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் உங்களது நடிப்பு மிகவும் பிரமாதம். நான் மிகவும் ரசித்து பார்த்தேன், திரையில் நீங்கள் டாப்சியுடன் தோன்றும் காட்சிகள் இளமை அழகுடன் எல்லோரையும் கவரும் வண்ணம் உள்ளன.

இந்த படம் உங்களை நிச்சயம் ஒரு புதிய உயரத்துக்கு கூட்டி செல்லும் என்றும் தொடர்ந்து வெற்றி படங்களை குவித்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார்.

பதிலுக்கு ஆர்யாவும் இந்த பாராட்டு என்னை ஊக்குவிக்கிறது, உங்களுடன் பணிபுரியும் வாய்ப்பு எப்போது கிடைத்தாலும் நிச்சயம் நடிக்க வருவேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &