இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் கட்டணங்களும் 7 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபை மற்றும், தனியார் பஸ் கட்டண திருத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன கூறியுள்ளார்.
பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தேசியக் கொள்கைக்கு அமைய தனியார் மற்றும் அரச பஸ் கட்டணங்களை ஒரே வீதத்தால் அதிகரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பஸ் கட்டணப் பட்டியலை எதிர்வரும் 25ஆம் திகதி வெளியிடவுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வில்லை என ஆணைகுழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Oct 19, 2013
SLTB - போக்குவரத்து சபை பஸ் கட்டணங்களும் அதிகரிப்பு
Posted by AliffAlerts on 13:08 in NL | Comments : 0