BREAKING NEWS

Oct 1, 2013

துல் ஹிஜ்ஜஹ் தலைப் பிறை பார்த்தல் தொடர்பாக......


ACJU/HLL/016/1434

ஹிஜ்ரி 1434.11.20 (2013-09-27)

கௌரவ தலைவர் ஃ செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
மாவட்ட / பிராந்திய கிளைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

துல் ஹிஜ்ஜஹ் தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக......

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாகொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவை பிரதி மாதமும் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடி தலைப்பிறையைத் தீர்மானித்து வருகின்றன. அவ்வகையில் துல் கஃதஹ் 29 ஆம் நாள் (2013.10.06ஆம் திகதி) ஞாயிற்றுக்கிழமை மாலை திங்கட்கிழமை இரவு எதிர்வரும் துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்கான கூட்டம் நடைபெறவுள்ளது.

எனவே அன்றைய நாள் பிறை பார்க்கும் படி தங்களது கிளைகளுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் அறிவிப்பு செய்து மக்களை பிறைபார்க்கத் தூண்டும்படியும் பிறை கண்டதாக வரும் சாட்சியங்களை சரியாக விசாரித்து ஊர்ஜிதப்படுத்தி எழுத்து மூலம் அச்சபைக்கு அறியத்தருமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு தங்களிடம் கனிவாகக் கேட்டுக் கொள்கிறது.

குறிப்பு:

 ஊர்ஜிதப்படுத்திய சாட்சியை அறிவிப்பதற்கு:
தொ.பேசி: 011-5234044, 011-2432110, 011-2434651, 077-7366099 071-5410198
தொ.நகல்: 011-2390783
மின்னஞ்ஞல்: mail@acju.net
  
தலைமையகத்திலிருந்து தொடர்பு கொள்வதற்காக தங்களது கிளைப் பிரதிநிதி ஒருவரின் பெயர்விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை 071-5410198 என்ற இலக்கத்திற்கு துல் கஃதஹ் 28 (ஒக்டோபர் 05) ஆம் திகதிக்கு முன்னர் அறியத்தரவும்

வல்ல அல்லாஹ் நம்மனைவரது தீன்பணிகளை பொருந்திக்கொண்டு நல்லருள் புரிவானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
பிறைக்குழச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா     

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &