பிபிலை, மடவல வயல் பிரதேசத்திலுள்ள வீட்டு முற்றத்திலிருந்த மரமொன்றில் நாகபாம்புடன் 29 குட்டிகளும், 21 முட்டைகளையும் மீட்டுள்ளதாக வன இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிபிலை, மடவல வயல் பிரதேசத்தில் நாமல் விஜேசிறிவர்தன என்பவரின் வீட்டு முற்றத்தில் வீட்டு நிர்மாணப் பணிகளுக்காக வெட்டப்பட்டிருந்த தும்பு மரத்தின் அடிப்பகுதியில் இருந்த புதர் ஒன்றில் பாம்பு ஒன்று அவதானித்ததையடுத்து புதரினை துப்புரவு செய்தபோது சுமார் 5 அடி நீளமுடைய நாக பாம்புடன் 29 குட்டிகளும் அதன் 21 முட்டைகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
வன பாதுகாப்பு அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா வனஜீவ மாவட்ட அதிகாரிகளுடன் ஸ்தலத்திற்கு விரைந்து நாக பாம்புகளை நில்கல அரச வனப் பகுதியில் விடுவிக்குமாறு பணிப்புரை வழங்கினார்.