
பறகஹதெனிய தேசியப் பாடசாலையில் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். சுமார் 140 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதில் கவிஷாலினி எனும் மாணவி 183 புள்ளிகளைப் பெற்று குருநாகல் மாவட்டத்தில் 4ஆம் இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது கடந்த முறை பறகஹதெனிய தேசியப் பாடசாலை மாணவி இது வரை பெற்ற அதிகூடிய புள்ளி எனும் 177 புள்ளியை விட அதிக புள்ளியைப் பெற்று பாடசாலை சாதனை ஒன்றை முறையடித்திருக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இருப்பினும் தோற்றிய மாணவர்களுள் 5 வீதமான மாணவர்கள் மட்டுமே சித்தியடைந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும். எனினும் கடந்த முறை ஒரு மாணவி மட்டுமே சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ஏனைய பாடசாலை பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவூம் குறைவான தேர்ச்சி மட்டமாகும். இது வரை பாடசாலை வரலாற்றிலே அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்திருப்பது 1996 அம் ஆண்டு 13 மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலிருந்து இன்று வரை அவ்வெண்ணிக்கை பகல் கனவாகவே இருந்து வருவது மிகவூம் கவலைக்குரிய விடயமாகும்.
பாடசாலை உயர்தர பெறுபேறுகள் எவ்வளவூ சிறந்தவையாக இருப்பினும் சாதாரண தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மிகவூம் தாழ்வான மட்டத்திலே தொடர்ந்தும் இருந்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.